சாலையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
X
காங்கேயம் காவல் நிலையம் அருகே சாலையில் நடுவே பழுதாகி நின்ற லாரி பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
காங்கேயம் போலீஸ் நிலையம் அருகே ரவுண்டானா அமைந்துள்ளது. அந்த வழியாக நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து சோயா மாவு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி சிக்னலுக்காக அங்கு நின்றது. பின்னர் அங்கிருந்து கோவை சாலையில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக கான்கிரீட் தடுப்பு சுவர் மீது லாரி மோதியது. அப்போது திடீரென லாரியின் டயர் வெடித்ததோடு, லாரியின் அச்சு முறிந்தது. இதனால் லாரியை நகர்த்த முடியவில்லை. இதனால் லாரி நடுரோட்டில் நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். பின்னர் அந்த லாரி பழுது நீக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டது.
Next Story