தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி மர்மமாக உயிரிழப்பு.

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி மர்மமாக உயிரிழப்பு.
X
தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி மர்மமாக உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள காரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (65) இவருக்கும் இவரது தம்பி சங்கரப்பா என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மகன் சீனிவாசன் விவசாய நிலத்திற்கு வந்து பார்த்த போது அங்கு நாராயணசாமியின் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story