தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூல்? மக்கள் குற்றச்சாட்டு

X
மத்திய, மாநில அரசுகள் இணையதளம் வழியாக பிறப்பு, இறப்பு, வருவாய் சான்றுகள் உள்பட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசின் எல் காட் நிறுவனம் சார்பில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றது. தனியார் மூலமாகவும் இ-சேவை மையங்கள் நடத்தப்படுகின்றது. இந்த இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இது குறித்து அவர்கள் கூறும்போது "தனியார் இ-சேவை மையங்களில், ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கு, ஒரு மையத்தில் ரூ.100-ம், மற்றொன்றில் ரூ.150-ம், இன்னொரு மையத்தில் ரூ.200-ம் வசூலிக்கப்படுகிறது. புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க ரூ.1000 கட்டணமாக பெறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தனியார் இ-சேவை மையங்களில் ஆய்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
Next Story

