மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சார்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி 5-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 50-வது ஆரத்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள ஏக்நாத் அரங்கத்தில் சனாதன தர்மமும் பாரத கலாச்சாரமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பின்னர் மாலையில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. ஏகாட்சர மகாகணபதி கோவிலில் பஜனை மற்றும் 7 கன்னி பெண் குழந்தைகளுக்கு சப்த கன்னியர் பூஜை நடந்தது. அதன் பிறகு முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி ஊர்வலம் நடந்தது.
Next Story