பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்ட இருவர் கைது

X
திருநெல்வேலி மாவட்டத்தில் முகநூலில் இரு தரப்பினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் புகைப்படம் பதிவிட்ட நந்தா(19) மற்றும் சேர்மன்துரை(32) ஆகியோரை மூன்றடைப்பு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். சமூக வலைதளங்களை கண்காணித்து, பொது அமைதியை குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

