கரூர்-ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ பெருந்திரள் முறையீடு போராட்டம்.
கரூர்-ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ பெருந்திரள் முறையீடு போராட்டம். தமிழக முதல்வர், ஓய்வூதிய குழு தலைவர்க்கும் தனித்தனியே முறையீட்டு மனு வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ பெருந்திரள் முறையீடு போராட்டம் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் தமிழ்மணி (ஜாக்டோ) பொன். ஜெயராம் (ஜியோ) ஆகியோரின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்திகோஷங்களை எழுப்பினர். மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்/ ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் இறுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களை சந்தித்து தமிழக முதல்வரு க்கும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வதற்காக அமைக்கப்பட்ட ஓய்வூதிய குழு தலைவருக்கும் தனித்தனியே முறையீட்டு மனுக்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
Next Story





