அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை

X
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாத்தூர் ஊராட்சி உட்பட்ட முனியன் தாங்கள் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்ததன் பெயரில் விவசாயிகள் தற்போது அறுவடை செய்த நெல்மணிகளை முனியன் தாங்கள் பகுதியில் கொட்டி வைத்துள்ளனர்.தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. எனவே இக்கிராமத்திற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

