மன்னகுடி சாலையில் மரம் விழுந்து மின்கம்பி சேதம்!

அறந்தாங்கி
அரசர்குளம் அடுத்த மன்னகுடி கோனார் குடியிருப்பு பகுதியில் நேற்று காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது இதனால் மின் கம்பிகள் அறுந்து சாலையில் கிடைக்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு அறுந்த மின்கம்பி ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் இதனை மின்சாரத்துறை சரி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story