தர்மபுரியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தர்மபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் பூக்கடை ரவி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்ஆர் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, விவசாய அணி தலைவர் அன்பழகன். முன்னிலையில் மாவட்ட செயலாளர் கேபி அன்பழகன் தலைமை வகித்தார். மு.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என எழுச்சி பயணமாக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிய இருப்பதால் சிறப்பான முறையில் வரவேற்பது குறித்து சிறப்புரையாற்றினார்.
Next Story