கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு : விவசாயிகள் பரபரப்பு !

X
கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த திட்டம் செயல்பட்டால் சுமார் 1,400 ஏக்கர் நிலம் பறிக்கப்படுவதுடன், 4,000 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். முன்னதாகவே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நிலம் பறிக்கும் முயற்சியை எதிர்த்து தடுத்தோம், இப்போது மீண்டும் அதே நிலைமை உருவாகிறது என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். டோல் கேட் வசூல் மற்றும் ரியல் எஸ்டேட், தொழில் அதிபர்களுக்கு ஆதரவாகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது; சிறு விவசாயிகளின் நிலமே குறிவைக்கப்படுகிறது என்று அவர்கள் வலியுறுத்தினர். “உயிரையே இழந்தாலும் எங்களுடைய நிலத்தை ஒப்படைக்க மாட்டோம்” என உறுதியுடன் தெரிவித்த விவசாயிகள், திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
Next Story

