கோவை: எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணம் - வேலுமணி ஆய்வு !

எடப்பாடி எழுச்சி உரை நிகழ்ச்சி – தொண்டாமுத்தூரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்.
கோவையில் நடைபெறும் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” எழுச்சி பயணத்தின் இரண்டாம் கட்டம் இன்று மாலை தொடங்குகிறது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, செப்.13 வரை 5 நாட்கள் கோவை மாவட்ட மக்களுடன் நேரடியாக சந்திப்பு, ரோட்ஷோ, எழுச்சியுரைகள் மூலம் பங்கேற்கிறார். இதன் ஒரு பகுதியாக இன்று தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செல்வபுரத்தில் ரோட்ஷோவும், தொண்டாமுத்தூர் மற்றும் குனியமுத்தூரில் எழுச்சியுரைகளும் நடைபெறவுள்ளன. இந்நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடியார் உரையாற்றவுள்ள இடங்களை முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி நேரில் ஆய்வு செய்து, ஏற்பாடுகளைப் பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
Next Story