ஆச்சார அள்ளி ஊராட்சியில் திமுக கிளைக் கூட்டம்

பென்னாகரம் வடக்கு ஒன்றியம் ஆச்சார அள்ளி ஊராட்சியில் திமுக கிளைக் கூட்டம் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வடக்கு ஒன்றியம் ஆச்சார அள்ளி ஊராட்சியில் எட்டியாம்பட்டி மற்றும் ஆச்சார அள்ளி திமுக கிளைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் பெருமாள் கவுண்டர் நகரில் நடைபெற்றது. கிளை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். பென்னாகரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எம்.பி.பாரி சிறப்புரையாற்றினார். பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல்,கிளை செயலாளர் கோவிந்தசாமி, துணை செயலாளர் தெய்வானை, நிர்வாகிகள் சின்னசாமி, மகளிர் அணி நிர்வாகி மல்லிகா, வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர் மனோஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். எட்டியாம்பட்டி சுடுகாடு அருகில் மெயின்ரோட்டில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும், எட்டியாம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம், விளையாட்டு மைதானம், பூங்கா, நூலகம் ஆகியவற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், ஒட்டியாணம் பட்டியில் இறுதிச்சடங்குகள் செய்ய படித்துறையுடன் கூடிய குளம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Next Story