காங்கேயம் அருகே கணவன் சினிமாவுக்கு அழைத்து செல்லவில்லை என இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை

X
காங்கேயம் படியாண்டி பாளையத்தில் வசித்து வருபவர் ஜீவா இவருக்கு கடந்த ஆண்டு சௌமியா என்ற பெண்ணுடன் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நேற்று சினிமாவுக்கு அழைத்து செல்லவில்லை என மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
காங்கேயம் அடுத்த முத்தூர் சாலையில் உள்ள படியாண்டிபாளையத்தில் வசித்து வருபவர் ஜீவா. ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார். இவரின் வீட்டு அருகே வசித்து வருபவர் சௌமியா. இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சௌமியாவிற்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் இதனால் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சௌமியாவிற்கு தைராய்டு நோய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சௌமியா சோர்ந்து நிலையில் வீட்டில் இருந்து வந்ததாகவும் அருகே உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் சினிமாவிற்கு அழைத்துச் செல் என கணவரிடம் கூறியதாகவும் சௌமியாவும் வாருங்கள் சினிமாவுக்கு சென்று விட்டு வரலாம் என ஜீவாவிடம் கூறியதாகவும் கூறப்படுகின்றது. அதற்கு ஜீவா வீட்டின் அருகே உள்ள மதுரை வீரன் கோவிலுக்கு சென்று விட்டு வந்து சினிமாவிற்கு அழைத்துச் செல்கின்றேன் எனக் கூறி சென்று விட்டார். பின்னர் தனது வீட்டுக்கு வரும்பொழுது வீட்டின் கதவு உள்ளே தாள் போட்டு இருந்ததாகவும் கதவை வெகு நேரம் தட்ட அவரது மனைவி சௌமியா திறக்காத காரணத்தினால் சத்தம் போட்டு அருகில் இருந்தவர்கள் அனைவரின் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த பொழுது விட்டத்தில் சேலை தொங்கியதாகவும் அவரது மனைவி மூச்சு பேச்சு இல்லாமல் கீழே கிடந்ததாகவும் உறவினர்கள் மற்றும் அருகே வாசிப்பவர்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை கொண்டு வந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு சௌமியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காங்கேயம் காவல்துறை சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதில் சௌமியா சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகவும். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண்டுகள் முடிவடையாத நிலையில் தற்போது தாராபுரம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர். காதல் செய்து திருமணம் முடிந்த பின்னரும் சினிமாவிற்கு அழைத்து செல்லவில்லை என்ற காரணத்தினால் மனைவி தற்கொலை செய்துகொண்டது காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

