ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

X
தூத்துக்குடியில் 9அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ மாநில முடிவின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை, முதுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்டசியடர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு பள்ளி ஆசிரியர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலை உடையார் அரசு ஊழியர் சங்கம் உமாதேவி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் 100 பெண்கள் உட்பட சுமார் 250பேர் கலந்து கொண்டனர்.
Next Story

