கரூரில் மகளிர்க்கான புற்றுநோய் கண்டறியும் முகாமை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.

கரூரில் மகளிர்க்கான புற்றுநோய் கண்டறியும் முகாமை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.
கரூரில் மகளிர்க்கான புற்றுநோய் கண்டறியும் முகாமை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி. கரூர் மாநகராட்சி வளாகத்தில் கரூர் ரோட்டரி சங்கமும் கரூர் மாநகராட்சியும் இணைந்து கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் மகளிர் கான இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பரிசோதனை கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் மகளிர்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா ஆணையர் சுதா மருத்துவ முகாம் தலைவர் கண்ணன்.மகளிர்க்கான திட்ட தலைவர் பூங்கோதை தியாகராஜன் இயக்குனர் காந்திமதி சுப்பிரமணியன் தலைவர் உத்தமன் செரோமல் செயலாளர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
Next Story