சோழவந்தானில் சாலைகளை சீரமைக்க கோரிக்கை.

X
மதுரை சோழவந்தான் பேரூராட்சியில் மூன்றாவது வார்டு பசும்பொன் நகர் வி ஜி மஹால் முன்பு ஆபத்தான நிலையில் ஆளை விழுங்கும் வகையில் குண்டும் குழியுமாக சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கர்ப்பிணி தாய்மார்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் . இந்த பகுதியில் உள்ள மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஆளை விழுங்கும் பள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த கணவர் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக கர்ப்பிணி பெண் உயிர் தப்பனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

