கார் மோதியதில் சைக்கிளில் சென்றவர் பலி

X
மதுரை மாவட்டம் மேலூர் கருத்தபுளியம்பட்டி நேதாஜி இரண்டாவது தெருவில் வசிக்கும் முனியாண்டியின் மகன் அர்ஜுனன் (63) என்பவர் நேற்று மதியம் மதுரை திருச்சி நான்கு வழி சாலையில் கருத்தபுளியம்பட்டி எல்பிஜி கேஸ் பெட்ரோல் பங்க் அருகே சைக்கிளில் சென்ற பொழுது சென்னை வேப்பேரி சேர்ந்த நபர் ஓட்டி வந்த கார் மோதியதில் தலை மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அர்ஜூனன் உயிரிழந்தார். இது குறித்து இவரது மனைவி கருப்பாயி மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

