கரூர் அருகே சரக்கு வாகனம் திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி ஒருவர் உயிரிழப்பு.
கரூர் அருகே சரக்கு வாகனம் திடீரென பிரேக் இட்டதால் டூ வீலர் மோதி ஒருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் வயது 61. இவர் திங்கள்கிழமை இரவு 7-45 மணியளவில் கரூர்-சேலம் சாலையில் அவரது டூவீலரில் அப்பகுதியில் உள்ள தனியார் மோட்டார் ஷோரூம் அருகே சென்றபோது, மகாராஷ்டிரா மாநிலம்,தானே பகுதியைச் சேர்ந்த ஹனீஃப் ஜமாலுதீன் பர்கர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம் கருப்பண்ணன் டூவீலரை முந்தி சென்று திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் பிரேக் இட்டதால் கருப்பண்ணன் டூவீலர் சரக்கு வாகனத்தின் பின்னால் மோதி கருப்பண்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அறிந்த கருப்பண்ணனின் மகன் ஜெகன் வயது 26 என்பவர் அளித்த புகாரில் சாலை விதிகளுக்கு புறம்பாக சரக்கு வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஹனீஃப் ஜமாலுதீன் பர்கர் மீது வழக்கு பதிவு செய்தனர் வெங்கமேடு காவல்துறையினர்
Next Story





