மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

மத்திய மண்டலத்தில் பணிபுரியும் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் உள்ள *காவல் அதிகாரிகள் 10 பேர்* கலந்து கொண்டார்கள்.
மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான திருச்சி, திருச்சி மாநகரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று 09.09.2025-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் தளத்தில் திருச்சி மண்டல காவல் துறை தலைவர் K.ஜோஷி நிர்மல் குமார், உத்திரவின்படி, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த துப்பாக்கி சுடும்போட்டியில் மத்திய மண்டலத்தில் பணிபுரியும் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் உள்ள காவல் அதிகாரிகள் 10 பேர் கலந்து கொண்டார்கள். இந்த துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் ஆகிய இரண்டு வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது.
Next Story