வேலை பார்த்த தியேட்டருக்கு வந்த நடிகர் ராமராஜன்

வேலை பார்த்த தியேட்டருக்கு வந்த நடிகர் ராமராஜன்
X
மதுரை மேலூரில் வேலை பார்த்த சினிமா தியேட்டருக்கு நடிகர் ராமராஜன் வந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் நடிகர் ராமராஜன் பிறந்து வளர்ந்த ஊராகும். சினிமாவில் நடிப்பதற்கு குமரேசன் என்ற தனது பெயரை ராமராஜன் என மாற்றிக் கொண்டார். இவர் ஆரம்ப காலத்தில் மேலூரில் உள்ள கணேஷ் தியேட்டரில் பல ஆண்டுகளாக டிக்கெட் கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தான் வேலை பார்த்த கணேஷ் தியேட்டருக்கு ராமராஜன் நேற்று (செப்.8)வந்தார். தியேட்டரின் உரிமையாளர் முருகனை சந்தித்து பேசினார். மேலும் தற்போது நவீன முறையில் இந்த தியேட்டர் புதுப்பிக்கப்பட்டு உள்ளதை பார்த்து ராமராஜன் பாராட்டினார்.
Next Story