ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ஜெர்மன் மொழிதேர்வுக்கான பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ஜெர்மன் மொழிதேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளதால் விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதனடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவராக இருக்க வேண்டும். பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing), பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ (GNM Diploma), பி.இ (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்), பி.இ (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்), பி.இ (மின் மற்றும் மின்னணு பொறியியல் (EEE) & பி.டெக். தகவல் தொழில் நுட்பம் (B.Tech IT) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். 21 வயது முதல் 35 வரை நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்பது மாதமாகும், விடுதியில் தங்கிபடிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரியவும் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.2,50,000 முதல் ரூ.3,00,000 வரை வருவாய் ஈட்டும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும். மேலும் விவரங்களுக்கு 04328 – 276317 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story

