தொழிலதிபர் பிறந்த நாள் விழா - முதியோர் இல்லத்தில் அன்னதானம்

தொழிலதிபர் பிறந்த நாள் விழா - முதியோர் இல்லத்தில் அன்னதானம்
X
தொழிலதிபர் பிறந்த நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அன்னதானம்
மயிலாடுதுறை பகுதியில் மனிதநேயமிக்க மனிதராகவும், சிறந்த தொழிலதிபராகவும் விளங்கி வருபவர் ராஜப்பா. அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திண்டுக்கல்லில் சலீம் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் காந்தி ராஜன், மகாலிங்கம், வெங்கடேஷ், லோகு, கிருஷ்ணா உள்ளிட்டோர் திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தொடர்ந்து, பாரதிபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கினர். முதியோர் இல்லத்தில் இருந்தவர்கள் ராஜப்பா அவர்கள் மென்மேலும் வளரவும் சிறப்புடன் வாழவும் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து நிலக்கோட்டையில் உள்ள ஆசிரமத்தில் மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
Next Story