டாஸ்மாக் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
தமிழகத்தில் மதுபான காலிப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தினை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தாமரைப்பாடியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி அரசு மதுபான கடைகளில் காலி மதுபான பாடல்களை திரும்பப் பெறுவதற்கான ஏற்பாட்டினை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும் 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அரசு ஊழியர்களுக்கு நிகரான சலுகைகள் வழங்க வேண்டும் இ எஸ் ஐ மருத்துவ திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் தீபாவளி போன சாக 40% வழங்க வேண்டும் என்பன உட்பட 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள தாமரைப் பாடியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் குடோன் முன்பு இன்று 09.09.25 சி ஐ டி யு டாஸ்மாக் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தங்களது கோரிக்கை மனுவை டாஸ்மாக் குடோனின் செயலாளர் வழங்கினர்.
Next Story