நான்முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |9 Sept 2025 7:12 PM ISTமாணவ, மாணவியர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லக்கூடிய அடிப்படை உயர்கல்வியாகும்- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நான்முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியில் பேச்சு !
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ன தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நான்முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய திட்டமான நான் முதல்வன் உயர்வுக்கு படி 2025 நிகழ்ச்சி திருச்செங்கோடு வருவாய் கோட்டத்தில் கடந்த 28.08.2025 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயர்வுக்கு படி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வையும், வழிகாட்டுதலையும் அளிப்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதில் மாணவர்களுக்கான உதவித்தொகை, நுழைவுத்தேர்வு, கல்விக்கடன் அதற்கு தேவையான ஆவணங்கள், படிப்பு முடித்த பின்னர் அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளும் அதற்கான அணுகுமுறைகளும், இலவச பயிற்சி மையங்கள் போன்றவை குறித்த விபரங்கள் உள்ளிட்ட பிறத் தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் முகாம் நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு கோட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டு அதில் முதற்கட்டமாக நாமக்கல் கோட்டத்தில் 22.08.2025 ஞானமணி கல்வி நிறுவனத்திலும், திருச்செங்கோடு கோட்டத்தில் 28.08.2025 அன்று கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்திலும் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களில் பல்வேறு சூழ்நிலை காரணமாக 12-ம் வகுப்புக்கு மேல் உயர்கல்வி பயிலாத சுமார் 1500 மாணவ, மாணவியர்கள் கண்டறியப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் என பல்வேறு துறைகளின் சார்பில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில், ஞானமணி கல்லூரியில் நடைபெற்ற உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதில் 100 மாணவர்கள் ஐடிஐ, பாலிடெக்னிக், நர்சிங், டிப்ளமோ, தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பிரிவுகளில் உயர்கல்வி பயில்வதற்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 50 மாணவர்கள் முறையாக கல்வி (Regular student) பயில கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலாமல் ஒரு மாணவரும் இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி என்பது மிகவும் முக்கியான ஒன்றாகும். தங்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லக்கூடிய அடிப்படை மற்றும் வழிகாட்டுதலே உயர்கல்வியாகும். மேலும் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஏதுவாக அமையும் என மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நூற்றாண்டு விழா நடத்திய தலைமையாசிரியர்கள் மற்றும் சாரண, சாரணியர்ளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கல்லூரிகளில் உயர்கல்வி பயில பதிவு செய்த மாணவ, மாணவியர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, குமாரபாளையம் வட்டம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நீரேற்று நிலையம் மற்றும் படவீடு பேரூராட்சியில் இலவச வீட்டுவமனை பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை கள ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


