தொண்டாமுத்தூரில் சின்ன வெங்காயம் அறுவடை – விளைச்சல் குறைவால் விவசாயிகள் ஏமாற்றம் !

தொண்டாமுத்தூரில் சின்ன வெங்காயம் அறுவடை – விளைச்சல் குறைவால் விவசாயிகள் ஏமாற்றம் !
X
விவசாயிகள் ஏமாற்றம் – தொண்டாமுத்தூரில் வெங்காய விளைச்சல் சரிவு.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை தொடங்கியுள்ளது. ஆனால் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஜூன் மாத இறுதியில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. வழக்கமாக ஏக்கருக்கு 7–8 டன் விளைச்சல் கிடைக்க வேண்டிய நிலையில், இம்முறை பனிப்பொழிவு, மழை தாக்கம் காரணமாக 3½ டன் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், விலை குறைவாக இருப்பதும் விவசாயிகளை பாதித்துள்ளது. தொண்டாமுத்தூர் பகுதியில் நிலவும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ற வகை சின்ன வெங்காய விதையை கண்டறிந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story