அரியலூர் அருகே  மயான புறம்போக்கு என கூறி ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அரியலூர் அருகே  மயான புறம்போக்கு என கூறி ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
X
அரியலூர் அருகே  மயான புறம்போக்கு என கூறி ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
அரியலூர், செப்.9- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு கிராமம் தென்வடல் தெருவை சேர்ந்த ராஜாங்கம் என்பவரது மகன் சேகர் (64) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காலம் சென்ற இராமச்சந்திரன் மனைவி வளர்மதி (60) ஆகிய இருவரும் வருவாய் துறை கணக்கில் மயான புறம்போக்கு என உள்ள இடத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக  இருவரும் 3 தலைமுறையாக வசித்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது சம்பந்தப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் இடிக்க முயற்சித்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்து அங்கு சம்பந்தப்பட்ட இடத்தில் ஒன்று திரண்டனர்.இந்நிலையில் அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் ஒரு மாத கால கெடு கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இரண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடத்தினை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையில் இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினரும், திருச்சி பதிப்பு தீக்கதிர் பொறுப்பாளருமான ஐ.வி.நாகராஜன் ஆலோசனையின் பேரில் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் வழிகாட்டுதலின் பேரில் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் டி.தியாகராஜன், பி.பத்மாவதி, ஆர்.ரவீந்திரன், இ.மைதீன்ஷா, ஆர்.கோவிந்தராஜ், எம்.மகேந்திரன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆகியோர் நேற்று  (08.09. 2025) முன்தினம் மாலை அதுசம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் சம்பந்தப்பட்ட இரண்டு இடங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஆக்கிரமிப்பாளர்களை தொந்தரவு செய்து, காலி செய்ய அச்சுறுத்துவது வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதனையும் மீறி 9.08.28 அன்று நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கீழக்குடியிருப்பு தென்வடல் தெருவில் உள்ள மயான புறம்போக்கில் குடியிருந்து வரும் சேகர் மற்றும் வளர்மதி  ஆகியோர்களின் இட ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர்.இதற்கு முன்னதாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த இடத்தினை இடித்து அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குவிக்க முன்னேற்பாடு செய்திருந்த நிலையில் 09.08.2025 இன்று முடிவு செய்யப்பட்டது போல் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அப்பகுதியில் முகாமிட்டிருந்தனர். அப்போது நகராட்சி நிர்வாகம் ஜெயங்கொண்டம் போலீசார் பாதுகாப்புடன் இடிக்க முயற்சித்து புல்டோசர் மூலம் வந்தபோது அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். இதனை அறிந்த நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும் அடுத்த கட்டமாக சம்பந்தப்பட்ட நபர்களின் இடங்களை  நகராட்சி நிர்வாகம் இடிக்க முயற்சித்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த இடத்தினை காலி செய்யும் பட்சத்தில் அதற்குரிய இடத்தினையும் வழங்கி அந்த இரண்டு நபர்களுக்கும் வீடு கட்டி தர வேண்டும், மேலும் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், ஏழை எளிய மககளின் வீடுகளை எடுத்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் கீழக்குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story