தஞ்சாவூரில் ஆட்டோ ஒட்டுநர் வெட்டி கொலை: காவல்துறை விசாரணை

X
தஞ்சாவூர் விளார் சாலையில் ஆட்டோ ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை மதியம் தலை சிதைக்கப்பட்ட நிலையில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் புதுப்பட்டினம் ஊராட்சி, பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சசிக்குமார் ( 20). ஆட்டோ ஓட்டுநர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் விளார் ஊராட்சிக்குட்ட கலைஞர் நகர் பகுதியில் ஒரு இடத்தில் தலை சிதைந்த நிலையில் சசிகுமார் உயிரிழந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்து காவல்துறையினர் சசிகுமார் உடலை பார்வையிட்டனர். அதில் அரிவாளால் சசிகுமார் தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அப்போது சசிக்குமாரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சசிக்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என்ற பல்வேறு கோணங்களிலும், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் கொண்டும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

