முன்பகை காரணமாக கொலை வழக்கு குற்றவாளி வெட்டி படுகொலை

முன்பகை காரணமாக கொலை வழக்கு குற்றவாளி வெட்டி படுகொலை
X
திண்டுக்கல் அருகே முன்பகை காரணமாக கொலை வழக்கு குற்றவாளி வெட்டி படுகொலை தலையை எடுத்துச் சென்ற கொலையாளிகள். 4 மணி நேர தேடலுக்கு பிறகு கிடைத்த தலை
திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் உள்ள பழைய வக்கம்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மைக்கில் பட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது 38) கல்லால் தாக்கியும் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் . படுகொலை செய்த கொலையாளிகள் சிவகுமாரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர் இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலையை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரில் வருகை தந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மோப்பநாய் லக்கி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது கொலை நடைபெற்ற இடத்திலிருந்து மைக்கேல்பட்டி ஊர் எல்லை வரை சென்று மோப்பநாய் நின்றது. கொலை நடந்த சம்பவத்தை இடத்திலிருந்து நான்கு மணி நேர தேடலுக்கு பிறகு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பாலம் ஒன்றின் முடியாது கீழ் சிவகுமாரின் தலை கிடைத்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட சிவகுமார் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளது என்றும் இதன் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என தெரிய வந்துள்ளது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Next Story