திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்பு

X
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புறக்கலைப் பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை 30.09.2025 வரை தொடர்ந்து நடைபெறும். பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சியில் திருவையாறு, இசைக்கல்லூரி மையத்தில் இசை நாடகம், கும்மி கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் சிலம்பாட்டம் ஆகிய 4 கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பயிற்சியானது திருவையாறு, இசைக்கல்லூரி வளாகத்தில் பிரதி வாரம் 2 நாட்கள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை பகுதிநேரமாக நடைபெறும். ஓராண்டுகால சான்றிதழ் படிப்பாக நடத்தப்படும், இப்பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 17 வயதுக்கு மேல் அனைவரும் சேரலாம். இப்பயிற்சிக்கு ஓராண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.500/- மட்டுமே ஆகும். மேற்காணும் தகுதியுடன் இக்கல்லூரியில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சியில் சேர விருப்பம் தெரிவிப்பவர்கள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள இசைக்கல்லூரிக்கு நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கூடுதல் விவரங்களுக்கு 04362 261600, 9791466148 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

