திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியில் இருந்து நீக்கி திமுக நடவடிக்கை

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியில் இருந்து நீக்கி திமுக நடவடிக்கை
X
ஓடும் பேருந்தில் தங்க நகையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரமும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து (டிஸ்மிஸ்) உத்தரவிடப்படுவதாகவும், அவருடன் திமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார். இதனிடையே, நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி காசோலையில் கையெழுத்திடும் அதிகாரமும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story