மது போதையில் வாகனம் ஓட்டி வாலிபருக்கு ஜெயில்

மது போதையில் வாகனம் ஓட்டி வாலிபருக்கு ஜெயில்
X
தூத்துக்குடி மாவட்டம்.உடன்குடி அருகே மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் பலி 2 பேர் படுகாயம் இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரீத்தா, சிவ முருகனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை 9,500 அபராதம் விதித்து உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் சிவமுருகன் இவர் உடன்குடியில் உள்ள ஒரு வாகன விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் சிவமுருகன் கடந்த 6-11-2018 ஆம் ஆண்டு குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உடன்குடியில் இருந்து தாண்டவன் காடு செல்லும் சாலையில் மது போதையில் காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி சென்றுள்ளார். அப்போது சிவமுருகன் தனது காரை கொண்டு எதிரே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மீது மோதியுள்ளார் இதில் இருசக்கர வாகனத்தில் வந்த உடன்குடி முருகன் காலனி பகுதியைச் சேர்ந்த காங்கேயன் என்பவர் பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் காங்கேயனுடன் வண்டியில் வந்த முத்து மற்றும் படுக்கப்பத்தை சேர்ந்த தங்கதுரை ஆகியோர் காயம் அடைந்து மருத்துவமனை சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் இந்த விபத்து தொடர்பாக குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் என் இரண்டில் நடைபெற்று வந்தது வழக்கு விசாரணை செய்த நீதிபதி பிரித்த விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழப்புக்கு காரணமாகவும் இரண்டு பேர் படுகாயத்திற்கு காரணமாகவும் இருந்த சிவ முருகனுக்கு ஏழு ஆண்டுகள் கடங்காமல் தண்டனை மற்றும் 9500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story