முதியோரை கொலை செய்த வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள்
தூத்துக்குடி திரேஸ்புரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி இவருக்கும் திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி பகுதியைச் சேர்ந்த முத்துமாலை என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது இந்நிலையில் அடிக்கடி வரதட்சணை கேட்டு சின்னதம்பி மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார் இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு முத்து மாலை கர்ப்பம் தரித்துள்ளார் இந்த நிலையில் திரேஸ்புரம் மாதவர் நாயர் காலனி பகுதியைச் சேர்ந்த முனியசாமி கர்ப்பிணிப் பெண்ணான தனது பேத்தி முத்து மாலையை பார்ப்பதற்காக கடந்த 17 6 2022 அன்று சின்னத்தம்பியின் அண்ணன் மாரி சக்தி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அங்கே இருந்த சின்னத்தம்பி மற்றும் அவரது உறவினரான சேர்மம் என்ற இளம் பிழையாளி ஆகியோர் முனியசாமியை இங்கே உனது பேத்தியை பார்க்க வரக்கூடாது என முனியசாமி இடம் சத்தம் போட்டு உள்ளனர் அது வாய் தகராறு ஆக மாறி உள்ளது இதை தொடர்ந்து இரவு 10 மணி அளவில் முதியவர் முனியசாமி திரேஸ்புரம் மலர்மண்டபம் அருகே வரும்போது அங்கே வந்த சின்னத்தம்பி மற்றும் அவரது நண்பர் கருப்பசாமி இளம் பிழையாளி சேர்மம் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்தனர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் இரண்டில் நடைபெற்று வந்தது இன்று வடக்கே விசாரணை செய்த நீதிபதி பீரித்தா குற்றவாளிகள் சின்னத்தம்பி மற்றும் கருப்புசாமி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்
Next Story



