காரிமங்கலத்தில் கால்நடைகள் விற்பனை ஜோர்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி காரிமங்கலத்தில் செவ்வாய் தோறும் கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வார சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்த நிலையில், 800 ஆடுகள் 75 லட்சத்திற்கும், 600 மாடுகள் 70 லட்சத்திற்கும், 5 லட்சத்திற்கு நாட்டுக் கோழிகளும் என 1 கோடியே 50 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடந்ததாகவும். அடுத்த புதன்கிழமை புரட்டாசி மாதம் பிறப்பதால், கால்நடைகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story





