சூளகிரி அருகே சேலை கழுத்தில் இறுக்கியதில் மாணவி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பீர்ப்பள்ளி அடுத்த பெரிய குதிபாலாவை சேர்ந்தவர் சின்ன அப்பையன். இவருடைய மகள் ஷோபா (11) இவர் இம்மிடிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி ஷோபா தனது அண்ணனுடன் வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சேலை ஷோபாவின் கழுத்தை இறுக்கியதில் மாணவி மயங்கினார். இதைக் பார்த்த அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தூக்கிக்கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஷோபா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

