பணிக்குச் சென்ற காவல் சிறப்பு எஸ்ஐ மாயம்

X
குமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (47). இவர் அருமனை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக உள்ளார். கடந்த 31ஆம் தேதி லட்சுமணன் சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு இதுவரையிலும் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது மனைவி சிமி (45) கணவரின் செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் லட்சுமணன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அருமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

