ஆபத்தான மரம் -நாம் தமிழர் கட்சியினர் மனு

X
குமரி மாவட்டம் வில்லுக்குறி 9 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலையேரம் ஆபத்தான நிலையில் நின்ற மரத்தை அகற்றி தரக்கோரி நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி வேட்பாளர் ஆன்சி சோபாரணி தலைமையில் குளச்சல் தொகுதி மண்டல செயலாளர் சுஜித் மற்றும் வில்லலுக்குறி பகுதி நிர்வாகி ஜாண் பீட்டர் முன்னிலையில் பத்மநாபபுரம் சார் ஆட்சியரை சந்தித்து மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிகாரிகளை அழைத்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மரத்தினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி அந்த இடத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நிற்கும் மரத்தை விரைவில் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Next Story

