பக்தர்களிடம் வசூல் நடத்திய ஊழியர் பணியிடை நீக்கம்

X
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வரிசையில் நிற்காமல் நேரடி தரிசனம் செய்வதற்காக பக்தர்களிடம் ஊழியர்கள் யுபிஐ பண பரிவர்த்தனை மூலமும், நேரடியாகவும் பணம் பெற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இந்நிலையில் கோயில் ஊழியர் ஒருவர் பக்தர்களிடம் அதிகாலையிலேயே பணம் வசூல் செய்யும் இரு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. செய்திகளும் வெளியானது. இதன் எதிரொலியாக நடைபெற்ற விசாரணையில் கோயிலுக்குள் பண வசூலில் ஈடுபட்டவர் இந்து அறநிலையத்துறையின் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் சிறப்பு காவலர் நிலையில் பணியாற்றி வரும் ஊழியர் செந்தில்குமார் என்பதும், இவர் தற்போது துறையின் வாகன ஓட்டுனராகவும் இருந்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறையின் குமரி மாவட்ட இணை ஆணையர்(கூடுதல் பொறுப்பு)ஜான்சிராணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
Next Story

