ராணிப்பேட்டை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கண்டனம்!

X
ராணிப்பேட்டை அடுத்த நவலாக் அருகே காதல் ஜோடி மோட்டார்சைக்கிளில் சென்ற போது, 3 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து காதலனை தாக்கி விட்டு, இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்திற்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ராணிப்பேட்டை நவலாக் அருகே இளம் பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். மேலும் குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு, குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Next Story

