குழித்துறையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

X
குழித்துறை நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஏற்கனவே இரண்டு நாட்கள் நடந்தது. தொடர்ந்து 7,8,9 வார்டுகளுக்கு குழித்துறை விஎல்சி திருமண மண்டபத்தில் முகாம் நேற்று துவங்கியது. தாரகை கட்பட் எம் எல் ஏ துவக்கி வைத்தார். குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி முன்னிலை வகித்தார். ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதார அதிகாரி ராஜேஷ், ஆர் ஐ செந்தில், மானேஜர் ஸ்டீபன், காங். குழித்துறை நகர முன்னாள் தலைவர் அருள்ராஜ், கிங்ஸ்லி முல்லர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து துறைகள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. 100க்கு மேற்பட்ட மனுக்கள் மக்கள் வழங்கினர். தொடர்ந்து மற்ற வார்டுகளுக்கும் நான்கு நாட்கள் முகாம் இதே திருமண மண்டபத்தில் நடக்கிறது.
Next Story

