கேரளா அரசு பஸ் மோதி காவலாளி பலி

கேரளா அரசு பஸ் மோதி காவலாளி பலி
X
மார்த்தாண்டம்
குமரி மாவட்டம் குளப்புறம் தளச்சான் விளையைச் சேர்ந்தவர் தேவதாஸ் (58), இவர் மார்த்தாண்டத்தை அடுத்த சிராயான்குழி பகுதியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அவர் சம்பவத்தன்று சாலையை கடக்க முயன்ற போது கேரளா அரசு பஸ் மோதியது .இதில் தேவதாஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார். அவரை அக்கம் பக்கத்தில் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் . இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் கேரளா அரசு பஸ் டிரைவர் திருவனந்தபுரம் புலியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த சிவ ராபின்(38) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story