கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை

X
திருவாரூர் மாவட்டம் வடபாதி செட்டியமூலையை சேர்ந்த ரமேஷ் என்பவர் நிலத்தகராறு காரணமாக அதே ஊரை சேர்ந்த துரையரசன் என்பவரை ஆபாசமாக திட்டி பீர் பாட்டிலால் குத்தி கொலை முயற்சி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பின் எதிரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
Next Story

