கரூர்-தமிழகம் வியந்து பார்க்க முப்பெரும் விழா நடந்திட வேண்டும். செந்தில் பாலாஜி வேண்டுகோள்.

கரூர்-தமிழகம் வியந்து பார்க்க முப்பெரும் விழா நடந்திட வேண்டும். செந்தில் பாலாஜி வேண்டுகோள்.
கரூர்-தமிழகம் வியந்து பார்க்க முப்பெரும் விழா நடந்திட வேண்டும். செந்தில் பாலாஜி வேண்டுகோள். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா குறித்து கரூர் சட்டமன்ற தொகுதி திமுகவினரிடையே ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ சிவகாமசுந்தரி மற்றும் கரூர் சட்டமன்றத் தொகுதி அளவிலான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு உரையாற்றிய செந்தில் பாலாஜி 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த விழா நாம் அனைவரும் ஒன்றிணைந்து குடும்பத்துடன் நடத்துகின்ற இயக்கத்தின் விழா.இந்த விழாவில் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் வருகை தந்து விருதுகளை வணங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.எனவே தமிழகமே வியந்து பார்க்கும் அளவிற்கு முப்பெரும் விழா மாநாடு போல் சிறப்பாக நடந்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
Next Story