திருமயம்: சாலை விபத்தில் வாலிபர் பலி!

X
சிவகங்கை மாவட்டம் எஸ்வி.மங்களத்தை சேர்ந்தவர் அஜீத்(26). அதே ஊரை சேர்ந்தவர் செந் தில்குமார்(22). இவர்கள் இருவரும் பைக்கில் புதுக்கோட்டை நோக்கி சென்றனர். பைக்கை அஜீத் ஓட்டினார். மதுரை சாலையில் இருந்து புற வழிச்சாலையில் சீமானுார் விலக்கு அருகே சென் றபோது, முன்னால் சென்ற கார் திடீரென நிறுத் தப்பட்டு கதவு திறக்கப்பட்டது. இதனால், நிலைதடுமாறிய இருவரும் கார் மீது மோதி கீழே விழுந்தனர். படுகாயமடைந்த அவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு புதுக் கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஜீத் உயிரி ழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

