ஓடும் பேருந்தில் முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு.

ஓடும் பேருந்தில்  முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு.
X
ஓடும் பேருந்தில் முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம்(70) என்பவர், காவேரிப்பட்டிணத்தில் அரசு போருந்தில் பயணம் செய்தார். காவேரிப்பட்டணம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகே வந்த போது ராமலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உடனே பஸ் கண்டக்டர் அற்புதம், டிரைவர் சகாதேவன் ஆகியோர் இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போக்குவரத்து கழக மேலாளர் விமலன் மற்றும் காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து காவேரிப்பட்டணம் போலீசார், ராமலிங்கத்தின் உடலை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story