கரூர்-குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வெற்றி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பிஜேபியினர் கொண்டாட்டம்.

கரூர்-குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வெற்றி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பிஜேபியினர் கொண்டாட்டம்.
கரூர்-குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வெற்றி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பிஜேபியினர் கொண்டாட்டம். இந்திய நாட்டின் துணை குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து பிஜேபி கட்சியினர் நாடு முழுவதும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கோஷங்களை முழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சக்திவேல் முருகன் பாரதிதாசன் உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story