கூட்டணி கட்சிகளின் குழப்பங்கள் சரி செய்யப்படும் – வானதி சீனிவாசன்!

X
கோவை புளியகுளம் விநாயகர் கோவிலில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராதாகிருஷ்ணன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும், தமிழருக்கு அங்கீகாரம் அளித்த பிரதமர் நரேந்திர மோடியின் முடிவுக்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் துரோகம் செய்துவிட்டதாகவும் வானதை சீனிவாசன் குற்றம் சாட்டினார். அதிமுக பிரச்சனைக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்றும், இறுதியில் கூட்டணியில் ஒற்றுமை நிலவும், திமுகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
Next Story

