இருகூரில் மினிபஸ்சில் ஆபத்தான பயணம் – பயணியின் கால் சாலையில் உரசி பரபரப்பு !

இருகூரில் மினிபஸ்சில் ஆபத்தான பயணம் – பயணியின் கால் சாலையில் உரசி பரபரப்பு !
X
அதிக நெரிசலால் படிக்கட்டில் தொங்கிய பயணிகள் – பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கோவை மாவட்டம் இருகூர்–ஏ.ஜி.புதூர் சாலையில் இயங்கும் தங்கம் மினி பஸ்சில், அதிக நெரிசலால் பயணிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்து வருகின்றனர். நேற்று காலை பதிவு செய்யப்பட்ட காணொளியில், படிக்கட்டில் தொங்கிய ஒருவரின் கால் சாலையில் உரசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story