கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்காக நடத்தப்பட்ட சிறப்பு யாகம் !

கருமத்தம்பட்டி முருகன் கோவிலில் பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து சிறப்பு பிரார்த்தனை.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி, கோவை கருமத்தம்பட்டி அருள்மிகு சென்னியாண்டவர் முருகன் கோவிலில் நேற்று சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றன. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி, பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, அவரது வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர்.
Next Story