ஆம்பூர் அருகே செங்கல் சூளைக்கு விறகு லோடு ஏற்றி வந்த டிராக்டர் மோதி இளைஞர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே செங்கல் சூளைக்கு விறகு லோடு ஏற்றி வந்த டிராக்டர் மோதி இளைஞர் உயிரிழப்பு
X
ஆம்பூர் அருகே செங்கல் சூளைக்கு விறகு லோடு ஏற்றி வந்த டிராக்டர் மோதி இளைஞர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செங்கல் சூளைக்கு விறகு லோடு ஏற்றி வந்த டிராக்டர் மோதி இளைஞர் உயிரிழப்பு தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுனர் விநாயகம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குப்புராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (22) வெல்டிங் தொழிலாளியான இவர் பேரணாம்பட்டு பகுதியில் பணி முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது தட்டப்பாறை பகுதியில் இருந்து செங்கல் சூளைக்கு விறகு லோடு ஏற்றி கொண்டு வெங்கடசமுத்திரம் பாட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் சதீஷ் நிலைகுலைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிராக்டர் ஓட்டுனர் விநாயகம் என்பவரை தேடி வருகின்றனர் மேலும் ஆம்பூர் தட்டப்பாறை செல்லும் சாலை குறுகிய சாலை வசதி என்பதால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சாலை விரிவுபடுத்த வேண்டும் என அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
Next Story