கிருஷ்ணகிரியில் ஒளிரும் பெயர் பலகைகளை திறந்து வைத்த அமைச்சர்.

X
கிருஷ்ணகிரி நகராட்சியை அழகுபடுத்தும் விதமாக ராயக்கோட்டை மேம்பாலம் சந்திப்பு, சேலம் மேம்பாலம் சந்திப்பு மற்றும் திருவண்ணாமலை மேம்பாலம் சந்திப்பு பகுதிகளில் ரூ.34.50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள "நம்ம கிருஷ்ணகிரி" ஒளிரும் பெயர் பலகைகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று திறந்து வைத்தார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் (பர்கூர்), நகர மன்ற தலைவர் பரிதாநவாப், நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

